உள்ளூர் செய்திகள்

மகாமந்திரம்


காயத்ரி மந்திரம் குரு மந்திரம், மகாமந்திரம் என்று போற்றப்படுகிறது. ராஜரிஷி விசுவாமித்திரரால் வழங்கப்பட்ட இது,  மந்திரங்களின் தாயாக விளங்குகிறது.  
ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்
பூர், புவ, ஸுவ எனும் மூன்று லோகங்களையும் படைத்த ஒளி பொருந்திய சக்தியை தியானிக்கிறோம். மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை மேம்படுத்தட்டும் என்ற பொருளைக் கொண்டது இந்த மந்திரம். இதை ஜபிப்பவர்கள் அதிகமான பிராணசக்தியைப் பெற்று ஆயுள் விருத்தி அடைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !