ஆவணி பால்குட விழா : குதிரையில் பவனி வந்த பரமக்குடி சாத்தாயி அம்மன்
ADDED :1160 days ago
பரமக்குடி: பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் ஆவணி பால்குட விழாவை ஒட்டி உற்சவர் குதிரை வாகனத்தில் வீதி வலம் வந்தார். இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் 10 நாட்கள் விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆக. 8-ல் துவங்கிய விழா நேற்று பால்குட உற்சவத்துடன் நிறைவடைந்தது. தொடர்ந்து அம்மன் தினமும் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று இரவு பால்குட விழாவையொட்டி குதிரை வாகனத்தில் வீதி வலம் வந்தார். பின்னர் கோயிலை அடைந்த அம்மனுக்கு சிறப்பு தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.