நவநீதகிருஷ்ணன் கோவிலில் கோகுலாஷ்டமி நிகழ்ச்சி
ADDED :1260 days ago
புவனகிரி: கீரப்பாளையம் நவநீதகிருஷ்ணன் கோவிலில் கோகுலாஷ்டமி அஷ்ட்டமி நிகழ்ச்சி நடந்தது. இக்கோயில் 50 ஆண்டுகள் பழமையானது. கோகுல அஷ்ட்டமியை முன்னிட்டு நேற்று காலை மூலவர், நவநீதகிருஷ்ணன் , உற்சவர்களான கண்ணன், ராதை, ருக்மணி மற்றும் ஆஞ்சநேயர், கருடாழ்வார், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு பொருட்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிகள் அலங்கரிப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மாலையில் சுவாமி வீதியுலா காட்சியும், உறியடி நிகழ்ச்சியும் நடந்தது. சுற்றுபகுதி பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.