கிருஷ்ணர் அலங்காரத்தில் பகவதி தேவநாயகி அம்மன் காட்சி
ADDED :1178 days ago
அவிநாசி: கோகுலாஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு கிருஷ்ணர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்த பகவதி தேவநாயகி அம்மன் அவிநாசி அடுத்த பழங்கரையில், பகவதி தேவநாயகி அம்மன் கோவில் உள்ளது. இதனையடுத்து, ஆடி மாதம் நிறைவானதையும், கோகுலஷ்டமியை முன்னிட்டும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும், கிருஷ்ணர் அலங்காரத்தில் பகவதி தேவநாயகி அம்மன் பக்தர்களுக்கு அருள் புரிந்தார். இதில், பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.