கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED :1255 days ago
கூடலுார்: கூடலுார் யாதவ மகாசபை சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. சுவாமி அலங்காரத்துடன் கூடலழகிய பெருமாள் கோயிலில் இருந்து ஞானியார் கோனார் தெருவில் உள்ள கிருஷ்ணர் கோயில் வரை ஊர்வலமாக சென்றனர். அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமியை தேரில் அலங்கரித்து ரத வீதி வழியாக ஊர்வலமாக சென்று கூடலகிய பெருமாள் கோயிலில் நிறைவடைந்தது. ஏராளமான பக்தர்கள் கிருஷ்ணரின் பஜனை பாடல்கள் பாடிக்கொண்டே நடந்து சென்றனர்.