பக்திக்கு மிஞ்சிய பரிகாரமில்லை
ADDED :1172 days ago
அள்ள அள்ள உணவு தரும் அட்சய பாத்திரம் பாண்டவர்களிடம் இருந்தது. ஒருநாள் அதன் மூலம் அனைவருக்கும் உணவிட்ட திரவுபதி, தானும் சாப்பிட்டு பாத்திரத்தை கழுவினாள். இதன்பின் மறுநாளில் தான் அந்த பாத்திரம் உணவு வழங்கும் என்னும் நிலையில், துர்வாசர் உள்ளிட்ட முனிவர்கள் பலர் பாண்டவர்களை காண வந்தனர். பசியுடன் வந்த அவர்களுக்கு கொடுக்க உணவில்லையே என தர்மர் வருந்தினார். அவரைத் தேற்றிய திரவுபதி பக்தியுடன் கிருஷ்ணரை வழிபட்டாள். காட்சியளித்த கிருஷ்ணர் பாத்திரத்தை எடுக்க அதில் ஒரு பருக்கை ஒட்டியிருந்தது. அதை தன் வாயில் இட்டு சுவைத்தார். உடனே அங்கிருந்த முனிவர்களுக்கு வயிறார சாப்பிட்ட திருப்தி ஏற்பட்டது. எந்த நிலையிலும் பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் வேறில்லை என்பதை உணர்ந்த திரவுபதி மகிழ்ந்தாள்.