உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவனந்தீஸ்வரமுடையார் கோயிலில் ஆக., 24 இல் பாலாலயம்

800 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவனந்தீஸ்வரமுடையார் கோயிலில் ஆக., 24 இல் பாலாலயம்

சிக்கல்: சிக்கல் அருகே மேலக்கிடாரத்தில் கி.பி.1236 ஆம் ஆண்டில் முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியனால் கட்டப்பட்ட சிவகாமி அம்பாள் சமேத திருவனந்தீஸ்வரமுடையார் கோயில் பழமையும் புரதான சிறப்பினையும் பெற்றதாகும். இக்கோயில் வளாகம் முழுவதும் கல்வெட்டுகளாலும் பிராமி, தமிழ் கூட்டு எழுத்துக்களாலும் பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலின் தல வரலாறு, ஊரின் பெருமை உள்ளிட்ட புராண விஷயங்கள் இங்கு எழுத்து வடிவில் காணப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்ததால் புதியதாக திருப்பணிகள் மேற்கொள்வதற்கான பாலாலய பூஜைகள் வருகிற ஆக., 24 இல் துவங்க உள்ளது. நேற்று சிவன் கோயில் அருகே உள்ள உய்யவந்த அம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இன்று மகா கணபதி ஹோமம், நவக்கிரக யாகம், லட்சுமி ஹோமம் பூர்ணகுதி, உள்ளிட்டவைகளும் ஆக.,24 இல் பாலாலய விக்ரகங்களுக்கு பிரதிஷ்டை யாக பூஜைகள் உள்ளிட்டவைகளும் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை மேலக்கிடாரம் கிராம பொதுமக்கள், திருக்கோஷ்டியூர் மகா சுவாமிநீ பீடம் மதுரை அன்பர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !