உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்பாத்துறையில் பத்ரகாளியம்மன், மீனாட்சி அம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அம்பாத்துறையில் பத்ரகாளியம்மன், மீனாட்சி அம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சின்னாளபட்டி: அம்பாத்துறையில் பத்ரகாளியம்மன், மீனாட்சி அம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்களுக்கு, யாகசாலை அழைப்பு நடந்தது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில், இரு கால யாக பூஜைகளுடன் பூர்ணாஹூதி நடந்தது. கடம் புறப்பட்டை தொடர்ந்து, சிறப்பு பூஜைகளுடன் கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு விசேஷ அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு அன்னதானம், கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !