வெள்ளி கேடயத்தில் பிள்ளையார்பட்டி விநாயகர் உலா
ADDED :1177 days ago
திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வெள்ளி கேடயத்தில் விநாயகர் உலா வந்து அருள்பாலித்தார்.
பிள்ளையார்பட்டி சதுர்த்திப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும்.நேற்று காலை 9:30 மணிக்கு கொடிப்படத்துடன் சண்டிகேஸ்வரர் கோயில் வலம் வந்து கொடிமரம் அருகே எழுந்தருளினர். தொடர்ந்து உற்ஸவ விநாயகர், அங்குசத்தேவரும் எழுந்தருளி பூஜைகள் நடந்தன. விழாவை முன்னிட்டு, தினசரி காலை, இரவில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். இன்று பகல் உற்சவத்தில் வெள்ளி கேடயத்தில் விநாயகர் உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆக.27 ல் கஜமுக சூரசம்ஹாரம், ஆக.30 ல் தேரோட்டம், ஆக.31 ல் தீர்த்தவாரியும் நடைபெறும்.