வரசித்தி விநாயகர் கோயில் அன்னதான திட்டத்திற்கு நன்கொடை
ADDED :1178 days ago
ஸ்ரீகாளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் காணிப் பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் நடக்கும் அன்னதான திட்டத்திற்காக ஹைதராபாத் சேர்ந்த ரமேஷ் என்ற பக்தர் ரூபாய் ஒரு லட்சத்தை(காசோலை) நன்கொடையாக கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி இடம் வழங்கினார்.முன்னதாக ரமேஷ் குடும்பத்தினருக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் செய்தனர் தொடர்ந்து கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ விநாயகப் பெருமானை வழிபட்டவர்களுக்கு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.