கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்
ADDED :1178 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கிருஷ்ண ஜயந்தி அறக்கட்டளை சார்பாக, ஆர்.எஸ்.மங்கலத்தில் கிருஷ்ண ஜயந்தி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் போது குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர். நிகழ்ச்சியில், அறக்கட்டளை தலைவர் வேல்முருகன், செயலாளர் பிரபு, ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.