உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூல திருவிழா துவக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூல திருவிழா துவக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலதிருவிழா இன்று(23ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு இன்று முதல் 28.08.2022 வரை தினமும் இரவு - சந்திரசேகரர் உற்சவம் நடைபெறுகிறது. உற்சவ தினங்களில் ஆவணி மூல வீதிகளில் புறப்பாடு நடைபெறுகிறது

29.08.2022- காலை - கருங்குருவிக்கு_உபதேசம் செய்த லீலை மாலை - சுவாமி கற்பகவிருட்சம், அம்பாள் -வெள்ளி சிம்ம வாகனம்

30.08.2022 - காலை - நாரைக்கு முக்திகொடுத்த லீலை மாலை -சுவாமி பூத வாகனம்,அன்ன வாகனம்

31.08.2022 - காலை - மாணிக்கம் விற்றலீலை. மாலை - கயிலாய பர்வதம் , காமதேனு வாகனம் .

01.09.2022- காலை - தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை மாலை - சுவாமி தங்க சப்பரம், யானை வாகனம்

02.09.2022 - காலை - உலவாக்கோட்டை அருளிய லீலை மாலை - சுவாமி-அதிகாரநந்தி,அம்பாள் யாளி வாகனம்

03.09.2022 - காலை - பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை மாலை - சுவாமி தங்கரிஷபவாகனம் அம்பாள் வெள்ளி ரிஷப வாகனம்

04.09.2022 - காலை - வளையல் விற்ற லீலை.  இரவு -7.35-7.59 அருள்மிகு சுந்தரேஸ்வர சுவாமி பட்டாபிஷேகம்

05.09.2022 - காலை - தங்க சப்பரம் மாலை - நரியை பரியாக்கிய லீலை, சுவாமி,அம்பாள் தங்க குதிரைவாகனம் , திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், திருவாதவூர் மாணிவாசகப் பெருமான் எழுந்தருளல்

06.09.2022 - செவ்வாய் காலை  சொக்கநாதப்பெருமான் பிட்டுத்தோப்புக்கு எழுந்தருளி பிட்டுக்கு மண் சுமந்த லீலை  மதியம் 02.35-02.59மணிக்குள் மண் சாத்துதல்.மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருக்கோயிலுக்கு எழுந்தருளல்.

07.09.2022 -மாலை 4.30மணி - விறகு விற்றலீலை

08.09.2022 - காலை 10.30 சட்டத்தேர் மாலை 7 மணிக்கு சப்தாவர்ணசப்பரம்  

09.09.2022 - மாலை பொற்றாமரை குளத்தில்  தீர்த்தவாரி. இரவு-வெள்ளி ரிஷபவாகன உற்சவம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !