கருமுனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1177 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே பூசேரி கிராமம் கொல்லன் ஊரணியில் அமைந்திருக்கும் கருமுனீஸ்வரர், கருங்காளி, மங்கச்சி, ஆஞ்சநேயர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. கணபதி ஹோமம் தொடங்கி நவகிரக ஹோமம் முதல் கால, இரண்டாம் கால யாகசாலை பூஜை,தீபாரதனை நடந்தது. பின்பு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை நடத்தப்பட்டு கருட வாகன புறப்பாட்டுக்கு பிறகு சிவாச்சாரியார் சங்கரநாராயணன் தலைமையில் விமான கலசத்திற்கு காலை 9 மணிக்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. கருமுனீஸ்வரர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.