ராமனகிரி ஆசிரமத்தில் திருப்பணி பாலாலயம்
ADDED :1177 days ago
வாடிப்பட்டி,: வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி சிறுமலை தாடகை நாச்சியம்மன் அருவி அருகே சுவாமி ராமனகிரி ஆசிரமம் உள்ளது. இங்குள்ள சுவாமி சன்னதிக்கு மேல் உள்ள மூலஸ்தான விமான கோபுர திருப்பணி மற்றும் யாகசாலை, பாலாலயம் பூஜைக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சுவாமி ரமண பிரசாதனந்தகிரி செய்திருந்தார்.