இலங்கை, நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :1242 days ago
இலங்கை: வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தான மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று காலை நடைபெற்றது.
இலங்கை, நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தான நல்லூரான் கோயில் மஹோற்சவம் கடந்த 02ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று இலங்கை பக்தர்கள் புடைசூழ நடைபெற்ற விழாவில் முன்னதாக, கோயில் வசந்த மண்டவத்தில் விஷேச அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஆறுமுகப்பெருமான், வள்ளி, தெய்வானை சமேதராக உள் பிரகாரம் வலம் வந்து தேரில் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. நாளை 26ம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது.