விநாயகர் சதுர்த்தி விழா: விருத்தாசலம் சித்தி விநாயகர் வீதியுலா
ADDED :1491 days ago
விருத்தாசலம்: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விருத்தாசலம் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் மூன்றாம் நாள் உற்சவம் நடந்தது.விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா துவங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மூன்றாம் நாள் உற்சவத்தில், சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.இரவு 7:00 மணிக்கு மேல், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வாக, 31ம் தேதி காலை சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, மாலையில் கொழுக்கட்டை படையலிடும் நிகழ்ச்சி நடக்கிறது.