கீழப்பட்டு கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED :1345 days ago
சங்கராபுரம், சங்கராபுரம் அருகே கீழப்பட்டு கெங்கையம்மன், மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளச் செய்து பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். சங்கராபுரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.