உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம்

நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம்

சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. 


சிவகங்கை அருகே உள்ள நாட்டரசன் கோட்டையில் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் உள்ளது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்ஸவ விழா, இந்தாண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீதேவி பூமாதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !