சதுர்த்தியன்று கொழுக்கட்டை தானம் செய்தால்...
* சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகரை வழிபட்டு கொழுக்கட்டை தானம் அளித்தால் செல்வம் பெருகும்.
* விநாயகருக்கு கணபதி என்றும் பெயருண்டு. ‘க’ என்ற எழுத்து ஞானம், ‘ண’ என்பது மோட்சம், ‘பதி’ என்பது தலைவன் என்பதையும் குறிக்கிறது.
* தோப்புக்கரணமிட்டு விநாயகரை முதலில் வழிபட்ட முனிவர் அகத்தியர்.
* கேது புத்தி, கேது திசை நடப்பவர்கள் விநாயகரை வழிபடுவது நன்மை தரும்.
* ஆறு ஆதாரங்களில் விநாயகருக்கு உரியது மூலாதாரம்.
* புகழ்மிக்க அஷ்ட விநாயகர் கோயில்கள் மகாராஷ்டிராவிலுள்ள புனே நகரத்தைச் சுற்றியுள்ளன.
* அருகம்புல் மாலை சாத்தி வழிபட்டால் விநாயகர் அருளால் பிறவிப்பிணி தீரும்.
* விநாயகர் சதுர்த்தி அன்று மண்ணால் செய்த விநாயகரை வழிபடுவது சிறப்பு.
* சதுர்த்தி விரதமிருந்த பலனால் சிவபெருமானே பார்வதிக்கு கணவராக கிடைத்தார்.
* பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4:30 – காலை 6:00 மணிக்குள் விநாயகரை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும்.
* புல்லாங்குழல் இசைக்கும் விநாயகர் ஆந்திராவிலுள்ள ஸ்ரீசைலத்தில் வீற்றிருக்கிறார்.
* தஞ்சாவூர் சக்கரபாணி கோயிலில் சங்கு சக்கர விநாயகர் காட்சி தருகிறார்.
* விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்ட முதல்பெண் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.