காந்தாரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
ADDED :1132 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சி, குப்பச்சி வலசையில் காந்தாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த ஆக., 28 அன்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனலட்சுமி பூஜை, மந்திரம் சாத்துதல் உள்ளிட்ட முதல் கால பூஜை நடந்தது. இன்று காலை 10 மணியளவில் காந்தாரியம்மன் கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார் கும்பாபிஷேகம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை குப்பச்சி வலசை கிராம பொதுமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.