நலமான வாழ்விற்கு...
வழிகாட்டுகிறார் சாய்பாபா
* நாக்கை கட்டுப்படுத்து. உன் வாழ்வு நலமாகும்.
* அன்பே சிறந்த முதலீடு. எல்லோரிடமும் அன்பாக இருங்கள்.
* உடல்நலம் இல்லாதவன் சாப்பிட விரும்புவதில்லை. மனநலம் இல்லாதவன் கடவுள் மீது பக்தி கொள்வதில்லை.
* கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் மனித சமுதாயம், விலங்குகளின் காடாக மாறி விடும்.
* பொருள் இல்லாதவனை ஏழை என்கிறது உலகம். உண்மையில் பேராசை கொண்டவனே ஏழை.
* செடிக்கு வேலியிடுவது போல, மனதிற்கு வைராக்கியம் என்னும் வேலியை இடு.
* கடவுளுடன் பேசுவது வழிபாடு. கடவுள் பேசுவதைக் கேட்பது தியானம்.
* வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகளை கண்டு கலங்காமல், அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்.
* தன்னிடம் குற்றத்தையும், பிறரிடம் குணத்தையும் தேடுபவருக்கு நன்மை அதிகரிக்கும்.
* ஆயிரம் அறிவுரைகளை வழங்குவதைவிட, ஒரு பயனுள்ள செயலில் ஈடுபடுவது சிறந்தது.
* கடவுளையும், மனிதனையும் இணைக்கும் பாலமே வழிபாடு.
* ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும் போது கவலைகள் பறந்தோடி விடும்.
* எந்த பொருளும் அழிவதில்லை. அது வேறொன்றாக மாறிக் கொண்டேயிருக்கிறது.