ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் பூங்கா
ADDED :1136 days ago
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் 16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 135 அறைகள் கொண்ட ("லோ பாவி") பரத்வாஜ் தீர்த்தம் அருகில் உள்ள கைலாச சதன் விடுதி அருகில் 10 லட்சம் ரூபாய் செலவில் கண் கவரும் வகையில் பூங்கா அமைத்து வருகின்றனர். இந்த பணிகளை ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசலு பார்வையிட்டார் . மேலும் அங்கு புதியதாக திருமலையில் மட்டுமே கிடைக்கும் சிறப்பு வாய்ந்த கண்கவரும் வகையில் உள்ள மரக்கன்றுகளை நட்டார் . புதிதாக அமைத்துள்ள விடுதிகளில் வரும் நாட்களில் பக்தர்கள் தங்கும் வசதிக்கு தட்டுப்பாடு ஏற்படாத விதத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தெரிவித்தார்.