விநாயகர் சதுர்த்தி : கூடலூர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1137 days ago
கூடலூர்: கூடலூர் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. காலை 4:00 மணிக்கு கணபதி ஹோமம்; 7:00 மணிக்கு மஹா தீபாராதனை நிகழ்சிகள் நடந்தது. மூலவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். காலை 10:00 மணிக்கு ஸ்ரீ சக்தி விநாயகர் உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்துடன், கோவிலை சுற்றி ஊர்வலமாக அழைத்து வந்தனர். தொடர்ந்து, பக்தர்கள் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.