கூடலுாரில் கொட்டும் மழையில் விநாயகர் சிலை ஊர்வலம்
ADDED :1176 days ago
கூடலுார்: கூடலுாரில் கொட்டும் மழையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.
கூடலுாரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஹிந்து முன்னணி சார்பில் 30 இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாடப்பட்டது. நேற்று அனைத்து சிலைகளையும் ஒரே நேரத்தில் வாகனங்கள் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தை நகர தலைவர் பாண்டித்துரை, பொதுச்செயலாளர் ஜெகன் முன்னிலையில், மாநில அமைப்பாளர் பொன்னையா துவக்கி வைத்தார். புது பஸ் ஸ்டாண்டில் துவங்கிய இந்த ஊர்வலம் பழைய பஸ் ஸ்டாண்ட், ரத வீதி, நகராட்சி தெரு, பெட்ரோல் பங்க் வழியாக காஞ்சிமரத்துறை முல்லைப் பெரியாற்றில் சிலைகள் கரைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிச்சைப் பாண்டியன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஹிந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.