பழனி ஆண்டவர் கோவில் இன்று கும்பாபிஷேகம்
ADDED :1171 days ago
கோவில்பாளையம்: நஞ்சுண்டாபுரம் புதூர் பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், கள்ளிப்பாளையம் ஊராட்சி, நஞ்சுண்டாபுரம் புதூர், பழனி ஆண்டவர் கோவிலில் தமிழ் முறைப்படி திருக்குட நன்னீராட்டு விழா கடந்த 3ம்ம் தேதி வேள்வி பூஜை உடன் துவங்கியது. நேற்று கலசம் நிறுவுதல், எண் வகை மருந்து சாத்துதல், ஜமாப் இசை நிகழ்ச்சி நடந்தது. இன்று அதிகாலை 5:30 மணிக்கு சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் ஆகியோர் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 8:30 மணிக்கு அச்சம் பாளையம் சண்முகம் குழுவினரின் பஜனை நடக்கிறது. இதையடுத்து தசதானம், தச தரிசனம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.