உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்வஜோதி கோயிலில் வருடாபிஷேகம்

வில்வஜோதி கோயிலில் வருடாபிஷேகம்

கடலாடி: கடலாடி அருகே மங்கலம் கிராமத்தில் உள்ள பால தேவதை வில்வஜோதி, விநாயகர், கருப்பணசாமி, கிருஷ்ணம்மாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜை, மங்கல இசை வாத்தியங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட அலங்கார கும்பத்தில் புறப்பாடு நடந்தது. மூலவர்களுக்கு 16 வகையான அபிஷேக, ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !