உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உறைகிணற்றில் விளக்கு பூஜை

உறைகிணற்றில் விளக்கு பூஜை

சாயல்குடி: சாயல்குடி அருகே உறைகிணறு கிராமத்தில் விளக்கு பூஜை நடந்தது. சத்திரிய இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியமான பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆவணி பொங்கல் விழாவை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக சுந்தரராஜ பெருமாள் கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். மாங்கல்ய பூஜை, லட்சுமி ஸ்தோத்திரம், அர்ச்சனை, நாமாவளி உள்ளிட்டவைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !