பக்தர்கள் வெள்ளத்தில் பாதூர் பொற்கலை அய்யனார் கோவில் திருவிழா
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பொற்கலை அய்யனார் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் உற்சவம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் கிராமத்தில் ஸ்ரீ பொற்கலை அய்யனார் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இக்கோவில் திருவிழா கடந்த 23ம் தேதி துவங்கியது. 24ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. 25ம் தேதி முதல் 5ம் தேதி வரை தினசரி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடந்தது. ஊரணி விழாவான நேற்று மாலை குதிரை வாகனத்தில் ஸ்ரீ பொற்கலை அய்யனார் சுவாமி உற்சவம் நடந்தது. பாதூர் கிராமத்தை சுற்றி வந்த சுவாமி ஏரி பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் உற்சாக ஆட்டத்துடன் கோவிலை சென்றடைந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றியதற்காக குதிரைகளை செய்து வழிபட்டு கோவிலில் சென்று வைத்தனர்.