காங்கயம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :1164 days ago
சூலூர்: காங்கயம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் அடுத்த காங்கயம் பாளையம் மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா, கடந்த, 3 ம்தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நான்கு கால ஹோமம் முடிந்து, நேற்று முன்தினம் காலை, புனித நீர் குடங்கள் மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. காலை, 6.15 மணிக்கு மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. வள்ளி கும்மி ஆட்டம், பஜனை நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.