பொள்ளாச்சி கோவிலில் வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை
ADDED :1163 days ago
பொள்ளாச்சி, : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில், வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசி விழா நடந்தது. மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு திவ்ய திருமஞ்சனம் நேற்று நடந்தது.காலை, 10:30 மணிக்கு குழுவினரால், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.