சபரிமலையில் ஓணம் திருவிழா : சன்னிதானத்தில் மெகா அத்தப் பூக்கோலம்
ADDED :1163 days ago
கூடலுார்: சபரிமலை சன்னிதானத்தில் ஓணம் திருவிழாவை முன்னிட்டு மெகா அத்தப்பூக் கோலம் போடப்பட்டிருந்தது.
கேரளாவில் முக்கிய திருவிழாவான ஓணம் பண்டிகை நாளை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சபரிமலை சன்னிதானத்தில் இவ்விழாவை முன்னிட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். உத்திராடம் சபரிமலை மேல் சாந்தி அன்னதானம் நடந்தது. கோயில் வளாகத்தில் மெகா சைஸ் அத்தப்பூக் கோலம் போடப்பட்டது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.