அய்யனார் அரியசாமி கோயில் புரவி எடுப்பு விழா
ADDED :1094 days ago
நரிக்குடி: நரிக்குடி பள்ளப்பட்டி ஸ்ரீ அய்யனார் அரியசாமி கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது. குதிரைகள் செய்வதற்கு பரம்பரையாக 14 வகையறாக்கள சார்பாக, பள்ளப்பட்டி கண்மாய் பெரியமடை பகுதியில் எடுக்கப்பட்ட புரவி மண்ணை நரிக்குடி பஸ் ஸ்டாண்ட் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று கோயிலில் வைத்து, பூஜை செய்யப்பட்டது. பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.