ஆவரேந்தல் மாரியம்மன் கோவில் விழா
ADDED :1206 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆவரேந்தல் மாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, பெண்கள் முளைப்பாரியிட்டு, கரகம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முன்னதாக, பாலவளர்த்தம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து கிராமத்தினர் கரகம் எடுத்து ஊர்வலமாக சென்று, மாரியம்மன் கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர். இரவில் பெண்களின் கும்மியாட்டம் நடைபெற்றது.