இவனே உத்தமன்
ADDED :1129 days ago
மனிதர்களில் நான்கு வகையினர் உண்டு. அதமா அதமன், அதமன், மத்யமன், உத்தமன் என்பவை எவை. பிறரையும் வாழ விடாமல், தானும் வாழாமல் இருக்கும் பயனற்றவனே அதமா அதமன். தான் மட்டும் வாழ நினைப்பவன் அதமன். தான் வாழ வேண்டும், பிறரும் வாழ வேண்டும் என நினைப்பவன் மத்யமன். தான் கெட்டாலும் பிறர் வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவன் சிறந்த உத்தமன். பிறரிடம் கையேந்தி யாசகம் பெறுவது இழிசெயல். தனக்கு இழிவானாலும், தேவர்களின் நன்மைக்காக வாமனர் மகாபலிசக்கரவர்த்தியிடம் யாசகம் கேட்டார். அதன் காரணமாகவே ஆண்டாள் வாமனரை உத்தமன் என்று சிறப்பாகக் குறிப்பிடுகிறாள்.