இன்னும் தீர்க்கமானது
ADDED :1131 days ago
கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டாள் பாத்திமா. கூலி வேலைக்கு செல்லும் அவளுக்கு கிடைக்கும் பணம் சொற்பமானது தான். இருந்தாலும் வறுமையிலும் செம்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் உறுதியாக இருந்தார். வேலைக்கு சென்று வரும் வழியில் இரண்டாயிரம் ரூபாய் தாளை கண்டெடுத்தாள். அதை ஒரு மாதம் வீட்டுச்செலவிற்கு வைத்துக்கொள்ளலாம் என மனம் நினைத்தது. இருந்தாலும் அதனை விரும்பவில்லை. அருகிலிருந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்றாள். அங்குள்ளவர்களுக்கு அத்தொகையை வழங்கி விட்டு தன் வீட்டிற்கு வந்தாள். பாத்திமா வேலை செய்யும் இடத்தில் சம்பளத்தை முதலாளி இருமடங்காக்கினார் என்ற செய்தியை பக்கத்துவீட்டு பரிமளா சொன்னாள். அதைக்கேட்ட போது அவள் மனதில் செம்மைக்கான உறுதி இன்னும் தீர்க்கமானது.