காரைக்குடி தூய சகாயமாதா ஆலய தேர்பவனி!
ADDED :4810 days ago
காரைக்குடி: காரைக்குடி செக்காலை தூய சகாயமாதா ஆலய விழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆக., 12 அன்று திவ்ய நற்கருணை பவனி நடந்தது. தினமும், மாலை 6 மணிக்கு திருப்பலி நடந்தது. ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் மறையுரை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது. திருச்சி, புனித பவுல் குருத்துவ கல்லூரி அதிபர் செபாஸ்டியான் ஆசியுரை வழங்கினார். நகரின் முக்கிய வீதிகளில் தேர்பவனி நடந்தது. நேற்று காலை திருவிழா திருப்பலியும், சிறுவர்களுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சியும், கொடியிறக்கமும் நடந்தது.