வெங்கிட்டாபுரம் பெருமாள் கோவிலில் திருவோண பூஜை
ADDED :1130 days ago
சூலூர்: திருவோணத்தை ஒட்டி, வெங்கிட்டாபுரம் காரண கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. வெங்கிட்டாபுரம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத காரண கரிவரதராஜ பெருமாள் பழமையானது. இங்கு பெரிய திருவோணத்தை ஒட்டி, சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் திருக்கேவிலை வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவை ஒட்டி, கோவில் வளாகத்தில், பல பூக்கோலங்கள் போடப்பட்டிருந்தன.