பழநி திருஆவினன்குடியில் வருடாபிஷேகம்: சங்காபிஷேகம், யாக பூஜை
ADDED :1211 days ago
பழநி: பழநி திருஆவினன்குடி கோயில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு சங்காபிஷேகம், யாக பூஜை நடைபெற்றது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோவிலான திருஆவினன்குடி கோயிலில் இன்று வருடாபிஷேகம் நடைபெற்றது. மூன்றாம் படை வீடான திரு ஆவினன்குடியில் கொடிமரத்தின் முன் வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கலசங்கள் வைத்தனர். அங்கு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க வேள்வி நடைபெற்றது. இதில் அமிர்தலிங்கம் குருக்கள், செல்வசுப்ரமண்ய குருக்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் குழந்தை வேலாயுத சுவாமிக்கு யாகத்தில் வைக்கப்பட்ட கலச நீரில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.