ஆவணி மாத பவுர்ணமி பூஜை
ADDED :1125 days ago
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி மலைமேல் கைலாசநாதர் கோயிலில், ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு கோயிலில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம் வழங்கும் கைலாசநாதர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி ஆகியோர் செய்திருந்தனர். வர்த்தக பிரமுகர் சவுந்தர பாண்டியன் அன்னதானம் வழங்கினார்.