தென்னம்பட்டியில் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1218 days ago
வடமதுரை: வடமதுரை தென்னம்பட்டியில் கல்குளம் முனியாண்டி, கருப்புச்சாமி, கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை முனியாண்டி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. திண்டுக்கல் காளியம்மன் கோயில் தலைமை அர்ச்சகர் பிரசன்ன வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். தென்னம்பட்டி ஊர் பெரியதனக்காரர்களான ஆர்.கிருபாசங்கர், ஆர்.சுப்புதுரைச்சாமி, எஸ்.வெங்கடேசன், எஸ்.பாலசுப்பிரமணியம், எம். அய்யாத்துரை, ஏ.பாலசுப்பிரமணி ஆகியோர் தலைமை வகித்தனர். சுற்றுப்பகுதி கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.