ஆரோக்கியமாக வாழ... எளிய விரதம்!
ADDED :1154 days ago
பணம், புகழ், பதவிக்கு ஆசைப்படுவோர் அதிகம் உண்டு. ஆனால் இவற்றை விட ‘எனக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பா’ என பலரும் வேண்டுவதை பார்த்திருப்போம். இப்படி உடல்நலத்துடன் வாழ சனிக்கிழமை விரதம் மிகவும் முக்கியமானது. நவக்கிரகங்களில் சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தை பொறுத்தே ஒருவரது ஆயுட்காலம் அமையும். இவரை கட்டுப்படுத்துபவர் பெருமாள். எனவே இவருக்கு உகந்தநாளான சனிக்கிழமையன்று விரதம் இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.