காளஹஸ்தி சிவன் கோயிலில் சிறப்பு ஹோம பூஜை
ADDED :1189 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று சங்கட ஹர சதுர்த்தியை ஒட்டி கோயில் வளாகத்தில் உள்ள அஞ்சி அஞ்சி விநாயகர் சன்னதியில் சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக கோயில் அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் ஆகம விதிப்படி ஹோம குண்டத்தை ஏற்பாடு செய்து அதில் சிறப்பு ஹோமத்தை வளர்த்தனர். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பூர்ணாவூதி நடத்தினர். இந்த சிறப்பு ஹோம பூஜையில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு கோயில் இணை ஆணையாளர் மல்லிகார்ஜுன் மற்றும் அறங்காவல் குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.