கெட்ட நாளா அமாவாசை
                              ADDED :1142 days ago 
                            
                          
                           
பிதுர்களுக்கு திதி கொடுப்பதை செய்யக் கூடாத செயலாக சிலர் கருதுகின்றனர். திதியன்றும், அமாவாசையன்று கோலமிடக் கூடாது என்பதால் அதை சுபமற்ற நாளாகவும் கருதுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபடவே கோலமிடுவதை தவிர்க்கிறோம். 
முன்னோர் வழிபாட்டுக்குரிய அமாவாசையன்று கேளிக்கை, விளையாட்டு, சுப நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது. இந்நாளில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு  தானம் அளிக்க பிதுர் ஆசி கிடைக்கும்.