உளுந்தூர்பேட்டையில் விஸ்வகர்மா சங்கம் சார்பில் சிறப்பு பூஜை
ADDED :1119 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் விஸ்வகர்மா ஜெயந்தி ஆராதனை விழாவையொட்டி விஸ்வகர்மா சங்கம் சார்பில் சிறப்பு பூஜை, ஆலோசனை கூட்டம் நடந்தது.
உளுந்தூர்பேட்டையில் விஸ்வகர்மா ஜெயந்தி ஆராதனை விழாவையொட்டி பாளையபட்டு அங்காளம்மன் கோவிலில் விஸ்வகர்மா சங்கம் சார்பில் சிறப்பு பூஜை, ஆலோசனை கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு விஸ்வகர்மா தொழிற்சங்க தலைவர் பாலன் தலைமை தாங்கினார். விஸ்வகர்மா சங்கர் செயலாளர் ராஜேந்திரன், துணைத் தலைவர் சுரேஷ், பொருளாளர்கள் மணிகண்டன், சண்முகம், நிர்வாகிகள் சீனு, சரவணன், முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விஸ்வகர்மா சங்க வளர்ச்சி, புதிய உறுப்பினர்களை சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டன.