திருப்பரங்குன்றம் கோயில்களில் செப். 26ல் நவராத்திரி விழா துவக்கம்
ADDED :1349 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் நவராத்திரி விழா செப். 26ல் துவங்கி அக். 5 வரை நடக்கிறது. கோயில்களில் தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலிப்பார். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக். 5ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்க குதிரை வாகனத்தில் பசுமலை அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடக்கும். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் நவராத்திரி திருவிழா நாட்களில் தினம் மாலையில் லட்சார்ச்சனை நடக்கிறது.