உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா

வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள அப்புலுபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா நடந்தது.

புரட்டாசி சனிக்கிழமைகளில், காலை, 6.00 மணிக்கு விஸ்வரூபம், 6.30 மணிக்கு சாற்று முறை, மாலை, 6.30 மணிக்கு நடை திறப்பு, 6.45 மணிக்கு மங்கள ஆரத்தி இரவு, 7.00 மணிக்கு உற்சவர் புறப்பாடு,  8.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புரட்டாசி மாதத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக அக்., 8ம் தேதி சனிக்கிழமை இரவு, 7.00 மணிக்கு கருட வாகன புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !