உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை திருப்பதி கோவிலில் சிறப்பு பூஜை

உடுமலை திருப்பதி கோவிலில் சிறப்பு பூஜை

உடுமலை; உடுமலை திருப்பதி வேங்கடேசா பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதத்தையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெறும். இதன்படி உடுமலையை சுற்றியுள்ள பெருமாள் கோவிலில் புரட்டாசியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.உடுமலை தளி ரோட்டில் பள்ளபாளையம் அருகே, உடுமலை திருப்பதி வேங்கடேசா பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், வேங்கடேசா பெருமாள், பத்மாவதி தாயார், ஆண்டாள் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.இதில், உடுமலை, பள்ளபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !