காட்டு மாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேக பூஜை
ADDED :1116 days ago
உடுமலை: உடுமலை, சின்ன பொம்மன் சாளை காட்டு மாரியம்மன் கோவிலில், சங்காபிஷேக பூஜை நடந்தது. உடுமலை அருகே சின்ன பொம்மன் சாளையில், பழமையான காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, 12 நாட்கள், புண்ணிய நதிகளிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று, சிறப்பு யாக பூஜை மற்றும், 108 சங்காபிஷேக பூஜை நடந்தது, தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை மற்றும் அலங்கார பூஜை நடந்தது. இதில், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.