திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம் 5 மணி நேரம் தரிசனம் ரத்து
ADDED :1189 days ago
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் 27ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. கருவறை, ஆனந்த நிலையம், கல் மண்டபங்கள், தங்க கொடிமரம் உட்பட அனைத்து இடங்களும், தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் கோயில் முழுதும் மூலிகை திரவியம் தெளிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. காலை 11 மணிக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.