நவராத்திரி விழா : அக்., 5ல் ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தல்
ADDED :1116 days ago
ராமேஸ்வரம்: நவராத்திரி விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் அக்.,5ல் நடை சாத்தப்படும் என கோயில் துணை ஆணையர் தெரிவித்தார்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் செப்., 25 முதல் அக்.,5 வரை நவராத்திரி விழா நடைபெற உள்ளது. கோயிலில் 11 நாட்கள் நடக்கும் விழாவில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி அருகில் லெட்சுமி, சரஸ்வதி, சிவதுர்கா, அன்னபூரணி உள்ளிட்ட பல அவதாரத்தில் பர்வதவர்த்தினி அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார். இறுதி நாள் விழாவான அக்., 5 விஜயதசமி யொட்டி அன்று மாலை 6 மணிக்கு மகர்நோம்பு திடலில் பர்வதவர்த்தினி அம்மன் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடக்கும். இதனால் அன்று மாலை 4:30 மணி முதல் 8 மணி வரை கோயில் நடை சாத்தப்படும் என கோயில் துணை ஆணையர் மாரியப்பன் தெரிவித்தார்.